மனசாட்சிக்கு பயந்து பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்....அமைச்சர் மா.சுப்பிரமணியன்...!!

தடுப்பூசி செலுத்த கட்டாய படுத்தவேண்டிய அவசியம் இல்லை என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா‌.சுப்ரமணியன் தெரிவித்தார் 

மனசாட்சிக்கு பயந்து பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்....அமைச்சர் மா.சுப்பிரமணியன்...!!

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழகத்தில் இன்று நடைபெற்ற 15 வது மெகா தடுப்பூசி முகாம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்க்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

இன்று ஒரே நாளில் 19,7009 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 84.26% முதல் தவணையும் 54.73% இரண்டாம் தவணையும் செலுத்திக்கொண்டுள்ளனர் என்றார். இதுவரை ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 80,461,787 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனக் கூறினார்.    

கொரோனா தொற்று உறுதி செயப்யபட்வர்களில் எஸ் டிராப் வகை பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 28 லிருந்து 33 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஒமைக்ரான் பாதிக்கபட்ட நபர் சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர் மிக நலமுடன் இருக்கிறார். எல்லா வகையிலும் கூடுதல் கவனத்தோடு செயல்படுகிறது வெளி நாடுகளிலிருந்து வருபவர்களும் கவனமாக இருக்கவேண்டும். அன்பு கூர்ந்து அரசுக்கு ஒத்துழைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர் பொது இடங்களில் தடுப்பூசி போடுவது கட்டாயம் என கூறியுள்ளோம். ஒரு சில நாடுகளில் கட்டாயப்படுத்துகிறார்கள். தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்களை கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. மனசாட்சிக்கு பயந்து அவர்களாகவே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அது நம்மையும் பிறரையும் பாதுகாக்கும் என கூறிய அவர்,

ஒமிக்ரான் அச்சம் காரணமாக முற்றிலுமாக மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து வெளி நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்தை தடை செய்ய முடியாது என தெரிவித்தார்.