தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை: தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்....

தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை, இருப்பினும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை: தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்....

வெளிநாடுகளில் ஒமைக்ரான் எனும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா இல்லை என்று பொதுமக்கள் கவனக் குறைவாக இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை அதிகரிக்க வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தகுதியுடையவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தும் விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும்., அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படாமல் கொரோனா தடுப்பூசி கட்டுப்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் கொரோனா பரிசோதனைகனை அதிகரிப்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தாலும் அதை எதிர்கொள்ள கட்டமைப்புகளை மேம்படுத்த அறிவுறுத்தி உள்ளார். ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் பாதிப்பும் மிக மோசமாக இருக்கும் என்பதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிப்பது மிக அவசியம் என கூறியுள்ளார்.