மருத்துவம் உள்ளிட்ட எந்த படிப்பிற்க்கும் நுழைவுத் தேர்வு இருக்கக் கூடாது - உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி!

மருத்துவப் படிப்புக்கு மட்டுமல்ல இனி எந்த படிப்புக்கும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணை அடிப்படை தகுதியாக அறிவிக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். 

மருத்துவம் உள்ளிட்ட எந்த படிப்பிற்க்கும் நுழைவுத் தேர்வு இருக்கக் கூடாது - உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி!

சென்னை பல்கலைகழகத்தின் 164 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, நூறாண்டுக்கும் மேல் பழமை கொண்ட இந்த பல்கலை கழகம் நாட்டின் ஐந்து முன்னாள் குடியரசுத்தலைவர்களை உருவாக்கிய பெருமை கொண்டது.

திமுக ஆட்சியில் தான் உயர்கல்வி மிகவும் வளர்ச்சியடைந்துள்ளதாக கூறிய அமைச்சர் பொன்முடி, அனைவருக்கும் உயர்கல்வி சென்று சேர வேண்டும் என்கிற முனைப்போடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருவதாகவும், மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட எந்த படிப்புக்கும் நுழைவுத் தேர்வு இருக்க கூடாது என்பதை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டதோடு, நீட் விலக்கு பெறும் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததற்காக தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் பொன்முடி கூறினார்.