” அரசு மருத்துவமனைக்கு நம்பிக்கையுடன் மக்கள் வரும் வகையில் சிகிச்சை இருக்க வேண்டும்” - தமிழிசை சவுந்திரராஜன் .

” அரசு மருத்துவமனைக்கு நம்பிக்கையுடன் மக்கள் வரும் வகையில் சிகிச்சை இருக்க வேண்டும்” -  தமிழிசை சவுந்திரராஜன் .

அரசு மருத்துவமனைக்கு நம்பிக்கையுடன் மக்கள் வரும் வகையில் சிகிச்சை இருக்க வேண்டும் தமிழிசை சவுந்திரராஜன் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னை  விமான நிலையத்தில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

சூடோமோனாஸ் பாதிப்பினால் ஒன்றரை வயது குழந்தை கை அகற்றப்பட்டு என்று கூறினால் சரியாக இருக்கும். சூடோமோனாஸ் உடல் முழுக்க பரவினால் மிகவும் கஷ்டமாகி விடும். குழந்தைக்கு சூடோமோனாஸ் கருமி வரும் அளவிற்கு என்ன நிலை என்பது தான் தெரியவில்லை. சக்கரை நோயாளிக்கு கால் விரல் அழுகி போகும். அந்த விரலை எடுக்கவில்லை என்றால் கால் முழுக்க அழுகி போகும். 

மருத்துவ குழுவின் அறிக்கை அப்படி இருக்கு. ஆனால் அரசு மருத்துவமனைக்கு எல்லாரும் நம்பிக்கையுடன் வரும் வகையில் சிகிச்சை இருக்க வேண்டும் என்பது ஆசை. முக்கியமான நபர்களே அரசு மருத்துவமனைக்கு செல்வதில்லை. எல்லா மாவட்ட தலைநகர் மருத்துவமனைகளிலும் நல்ல சிகிச்சை இருக்க வேண்டும். 

பொது சிவில் சட்டம் என்பது எல்லாருக்கும் பொதுவான சட்டம். பல பிரிவுகளில் பல்வேறு பழக்க வழக்கங்கள் உள்ளன. ஏதாவது ஒரு கால கட்டத்தில் எல்லாவற்றையும் ஒரே நிலையில் கொண்டு வர வேண்டிய அவசியம் இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தில் அப்படி சொல்லப்பட்டு உள்ளது. பெண்களுக்கு முன்னேற்றத்திற்கு தடையாக சில நடைமுறைகள் கொண்டதாக சில பிரிவுகள் உள்ளன. எல்லாவற்றையும் ஒரே நிலையில் கொண்டு வரும் போது எல்லோருடைய வாழ்க்கை தரமும் ஒரே மாதிரியாக இருக்கும். இத்தனை ஆண்டுகள் ஆகியும் பல பழக்க வழக்கங்கள் இல்லாமல் ஒரே நிலையாக வரும் போது எல்லாருக்கும் தீர்வு கிடைக்கும். 

புதுச்சேரி மாநிலத்திற்கு தண்ணீர் வர வேண்டும் என காவேரி மேலாண்மை வாரியத்தில் வலியுறுத்தி கொண்டு இருக்கிறோம். 

ஒன்றரை வயது குழந்தையின் தாய் வேறு எந்த குழந்தைக்கும் இந்த நிலை வரக்கூடாது என கூறி உள்ளார். சில நேரங்களில் தவறினால் கூட இந்த நிலை வர வாய்ப்பு இருக்கிறது. கிருமி தோற்று என்பதால் அது பற்றி தீவிரமாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிக்க    | ”குழந்தையின் கையை அகற்றியது தான் திமுகவின் சாதனை”.! - சீமான் விமர்சனம்.