நாங்கள் படை திரட்டி வந்தால் தாங்க மாட்டிர்கள்- கர்நாடக முதல்வருக்கு பிரேமலதா எச்சரிக்கை

தமிழ்நாடு - கர்நாடகா மாநில மக்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட கூடாதென்றால் மேகதாது அணைக்கட்டுவதை மத்திய, மாநில அரசு தடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

நாங்கள் படை திரட்டி வந்தால் தாங்க மாட்டிர்கள்-  கர்நாடக முதல்வருக்கு பிரேமலதா எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, இராம்நகரில் தேமுதிக சார்பில் கர்நாடகாவில் மேகதாது அணைக்கட்டுவதை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது..இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் மினி டிராக்டரில் அவரே ஓட்டியவாறு வருகை தந்தார்..பிரேமலதா தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் விஜய பிரபாகரன், கிருஷ்ணகிரி,தருமபுரி,வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தேமுதிகவினர் பங்கேற்றிருந்தனர் 

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழகம் வறண்ட பூமியாக உள்ளது.. மேகதாதுவில் அணைக்கட்டினால் 7 மாவட்டங்கள் நீரின்றி பாலைவனமாகிவிடும், காவிரி நீரை நம்பியே தமிழ்நாடு உள்ளது என்றும் இரண்டு மாநில மக்களும் இரத்தம், மூச்சுக்காற்று,இனம், மொழியால் ஒன்றுப்பட்டுள்ள நிலையில் நீரால் மட்டும் ஏன் நமக்குள் பிரிவினை என்றும் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, ஓசூர் எல்லைவரை வந்துவிட்டோம். கர்நாடகா அதிக தொலைவில் இல்லை. நாங்கள் நினைத்தால் இப்போதே பெரும்படை திரட்டி பெங்களூக்குள் நுழைய முடியும். எங்களால் உங்கள் எல்லைக்குள் வர முடியும். என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கர்நாடக முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நமக்குள் பிரிவினை வேண்டாம் என தமிழக விவசாயிகள் சார்பில் கூறிக்கொள்கிறேன் என தெரிவித்தார். 

மேலும் தமிழகம் - கர்நாடகா மாநில மக்களுக்கு இடையே பிரச்சனை  ஏற்படக்கூடாது என்றால் அதற்கு மேகதாதுவில் அணைக்கட்டக்கூடாது. அணைக்கட்டாமல் மத்திய, மாநில அரசுகள் கவனித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பேசினார்.  கர்நாடக- தமிழ்நாடு மக்களிடையே பிரிவினை இல்லை. அதுபோலவே தண்ணீரிலும் பிரிவினை இருக்க கூடாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்