திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஐபி பாஸ் ரத்து.. அறிவிப்பு பலகை வைத்தது கோவில் நிர்வாகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஐபி பாஸ் ரத்து

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஐபி பாஸ் ரத்து..  அறிவிப்பு பலகை வைத்தது கோவில் நிர்வாகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஐபி பாஸ் ரத்து செய்யப்பட் டுள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு படி கடந்த 9-ம் தேதி முதல் 250 மற்றும் 20 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இந்தக் கோவிலில் முக்கிய பிரமுகர்களுக்கு விஐபி பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்ததையடுத்து,  விஐபி பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலில் பல்வேறு இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.