இது மிகப்பெரிய அநீதி செயல்!!!- போராளி பாத்திமா பானு!!!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, பில்கிஸ் பானு மீது நடத்திய கொடுமை பற்றி, போராளி பாத்திமா பானு பேசினார். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்தார்.

இது மிகப்பெரிய அநீதி செயல்!!!- போராளி பாத்திமா பானு!!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக நியமிக்கப்பட்ட அருணா ஜெகதீசன் விசாரணை கமிஷன் அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குஜராஜ் கலவரத்தில், பில்கிஸ் பானு போராடி பெற்ற நீதியை குழி தோண்டி புதைக்கும் செயலை கண்டிப்பதாகவும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வந்த நிலையில், அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க | மாவட்ட ஆட்சியர் அலட்சியம் - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி நீதிபதி அறிக்கை:

ஸ்டெர்லைட்  எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக போராளி பாத்திமா பானு செய்தியாளர்களிடம் கூறுகையில், “குஜராத் கலவரத்தின் போது , கர்ப்பிணி பெண் பில்கிஸ் பானு மற்றும் அவர் குடும்பத்தார் மீது மிகக் கொடூரமாக வன்புணர்வு செய்து படுகொலை செயப்பட்டார். அவர் மீது தாக்குதலை நடத்திய 11 கொடூரர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அநீதி செயல்.” எனக் கவலை தெரிவித்தார்.

மேலும், அதனை வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமில்லாமல், அந்த 11 பேரின் கொடுங்குற்றவாளிகளின் முன்விடுதலையை ரத்து செய்ய வேண்டும் எனவும், இன்றைய ஆட்சியாளர்கள் தேர்தலுக்கு முன் மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டங்கள் நடந்த போது, எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்யவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கை முழுமையாக கால தாமதமின்றி தாக்கல் செய்து CBI விசாரணை அறிக்கைக்கும், அருணா ஜெகதீசன் தனிநபர் அறிக்கைக்கும் இடையில் இருக்கக் கூடிய அதிர்ச்சி தரும் மிகப்பெரிய இடைவெளி குறித்து, பொது மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் எனக் கேட்ட பாத்திமா, அரசு, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினார்.

மேலும் படிக்க | பில்கிஸ் பானோவிற்காக களத்தில் இறங்கிய பெண்கள்!!!!