விரைவில் தொண்டமாந்துறை கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும்...அமைச்சர் துரைமுருகன் பதில்!

விரைவில் தொண்டமாந்துறை கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும்...அமைச்சர் துரைமுருகன் பதில்!

உத்தமபாளையம் தொண்டமாந்துறை கால்வாய் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி திட்டம் செயல்படுத்தப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். 


இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உத்தமபாளையம் வட்டத்தில் தொண்டமாந்துறை கால்வாய் திட்டப் பணிகளை விரிவுப்படுத்த வேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 

இதையும் படிக்க : விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவராகும் சைலேந்திரபாபு?

இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கடந்த 2021ம் ஆண்டு 91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த அரசாணை வெளியிடபட்டதாகவும்,  ஆனால் தற்போது, திட்டத்திற்கு 139 கோடி ரூபாய் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது என்றும், இத்திட்டத்திற்கு சுருளி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு கம்பம் பள்ளதாக்கு பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால் திட்டம் செயல்படுத்த முடியவில்லை என்றார். 

மேலும், பேச்சுவார்த்தை மூலம் விரைவில் தீர்வு காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.