வீடு, நிலத்தை கேட்டு தி.மு.க. பிரமுகர் கொலை மிரட்டல் : மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்துடன் சென்று மனு கொடுத்த விவசாயி...

வீடு மற்றும் நிலத்தை கேட்டு தி.மு.க. பிரமுகர் கொலை மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் சென்று மனு அளித்துள்ளார். 

வீடு, நிலத்தை கேட்டு தி.மு.க. பிரமுகர் கொலை மிரட்டல் : மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்துடன் சென்று மனு கொடுத்த விவசாயி...
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அடுத்த ஏரல் பகுதியை சேர்ந்தவர்கள் பிரபாகர், மகேஸ்வரி தம்பதி. இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் உமரிசங்கர் என்பவருக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். குத்தகை பணத்திற்கு பதிலாக மகேஸ்வரி கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க நகையை உமரிசங்கரிடம் அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரபாகர் மற்றும் மகேஸ்வரியிடம் தொடர்ந்து பணம் கேட்டு உமரிசங்கர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் வீட்டிற்கு சென்று அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த காட்சிகள் அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. 

 
இது குறித்து ஏரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மகேஷ்வரி குடும்பத்துடன் சென்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. பிரமுகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.