ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த 60 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள்....

ஹைதராபாத்தில் இருந்து  60 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் 12 பாா்சல்களில் விமானத்தின் மூலம் சென்னை வந்தன.

ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த 60 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள்....

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் 2 டோஸ் தடுப்பூசிகளை கட்டயமாக போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

மேலும் மக்கள் அனைவரும் தடுப்பூசிகள் செலுத்திககொள்வதற்கு வசதியாக ஞாயிறு தோறும் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்களையும் தமிழக அரசு நடத்துகிறது. இதனால் மக்கள் மிகுந்த ஆா்வமுடன் வந்து தடுப்பூசிகளை செலுத்திக்கொள்கின்றனா்.

இந்நிலையில் நாளை தமிழகம் முழுவதும் 3 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் நடக்கவிருக்கின்றன. அதற்கு தேவையான கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்திய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. ஆனால் கோவாக்சின் தடுப்பூசிகள் குறைவாகவே வருகின்றன.

ஏற்கனவே முதல் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசி  போட்டுள்ளவா்களுக்கு இரண்டாம் டோஸ் போட  கோவாக்சின் தடுப்பூசிகள் தேவைப்பட்டது. இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை நேற்று தமிழ்நாட்டிற்கு 75 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளை ஹைதராபாத்திலிருந்து அனுப்பி வைத்தது.

இன்று மேலும் 60 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் 12 பாா்சல்களில் ஹைதராபாத்திலிருந்து வந்த இண்டிகோ விமானத்தில் சென்னை விமானநிலையம் வந்தது. அதனைதொடர்ந்து விமானநிலைய அதிகாரிகள் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் தடுப்பூசி பாா்சல்களை ஒப்படைத்தனா்.