தொழிலாளர்களின் விருப்பத்தின் பேரில் மட்டுமே நேரம் மாற்றப்படும்...! அமைச்சர் முத்துசாமி பேட்டி...!!

தொழிலாளர்களின் விருப்பத்தின் பேரில் மட்டுமே நேரம் மாற்றப்படும்...! அமைச்சர் முத்துசாமி பேட்டி...!!

தொழிலாளர்களின் வேலை நேரம் என்பது தற்போதும் 8 மணி நேரமாக தான் உள்ளதாகவும், தொழிலாளர்களின் விரும்பத்தின் பேரில் மட்டுமே நிறுவனங்களில் வேலை நேரத்தை மாற்றி அமைக்க முடியும் என தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை விழாவையொட்டி ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் கக்கன் நகர் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, தொழிலாளிர்களின் வேலை நேரம் என்பது தற்போதும் 8 மணி நேரமாக மட்டுமே உள்ளதாகவும், 12 மணி நேரமாக உயர்த்திய மசோதா என்பது தொழிலாளர்களின் விருப்பதின் பேரில் மட்டுமே நிறுவனங்களில் நடைமுறைப்படுத்த முடியும் என்றும் முதலாளிகள் தனியாக நேரத்தை உயர்த்த முடியாது என்றும் தெரிவித்தார்.  

தொடர்ந்து பேசிய அவர் இடைத்தேர்தல் போன்ற பல்வேறு காரணங்களால் கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் கடை ஒதுக்கீடு குறித்த முடிவு எடுக்கப்படவில்லை என்றும் பத்து நாட்களுக்குள் வியாபாரிகளுடன் கலந்து பேசி கடைகளை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் சோதனை பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் திட்டம் துவங்கப்படும் என தெரிவித்த அவர், கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணி தொடர்பாக வருகின்ற புதன் கிழமை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் பேச்சு வாரத்தை நடத்தப்பட்டு சுமூக தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.