தடுப்பூசி முகாம்களுக்கு இன்று விடுமுறை... 

தமிழகத்தில் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில் இன்று ஒரு நாள் தடுப்பூசி முகாம்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி முகாம்களுக்கு இன்று விடுமுறை... 

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு படிபடியாக குறைந்து வருகிறது இதனை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 

மேலும், கடந்த ஐந்து வாரங்களாக தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரக்கூடிய சூழல் அன்று ஒரே நாளில் காலை 7 மணியிலிருந்து மாலை 7 மணி வரையிலும் தடுப்பூசி முகாம்கள் செயல்படுகிறது. இதனால் தடுப்பூசி முகாம்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு திங்கட்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவிக்கப்பட்டு கடந்த மூன்று வாரங்களாக திங்கட்கிழமைகளில் தடுப்பூசி முகாம்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து தடுப்பூசி முகாம்களுக்கும்  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.