தடுப்பூசி முகாம்களில் குவியும் மக்கள்... நெரிசலை தவிர்க்க ஆன்லைனில் டோக்கன்...

தடுப்பூசி முகாம்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலையை மாற்றவும் ஆன்லைன் மூலம் டோக்கன் வினியோகம் என குமரி ஆட்சியர் அறிவிப்பு

தடுப்பூசி முகாம்களில் குவியும் மக்கள்... நெரிசலை தவிர்க்க ஆன்லைனில் டோக்கன்...
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அலைமோதி வருவதை கட்டுப்படுத்தும் வகையாக குமரி மாவட்டத்தில் இணையதளத்தில் தடுப்பூசி காண டோக்கன் பதிவு பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தும் முன் இணையதளத்தில் சென்று தங்களது டோக்கனை பதிவு செய்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் தடுப்பூசி செலுத்தும் மையம் நாள் நேரம் மற்றும் டோக்கன் எண் போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும். அதனை தடுப்பூசி மையத்தில் காண்பித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் இதன் மூலம் பொதுமக்கள் தேவையின்றி வரிசையில் காத்திருக்கும் சூழல் தவிர்க்கப்படும் என்று குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
 
மேலும் இந்த புதிய நடைமுறை நாளை திங்கட்கிழமை முதல் நடைபெறும் என்று தெரியப்படுத்தியுள்ளது அதற்கான மின்னஞ்சல் முகவரி ஆக bookmyvaccine.kumaricovidcare.in என்ற இணையதளத்தில் சென்று தங்களது டோக்கனை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் kumaricovidcare.in பழைய என்ற இணையதளத்திலும் இதற்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த இணையதளத்தில் bookmyvaccine என்ற பட்டனை அழுத்தி தங்கள் டோக்கனை பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரியப்படுத்துகிறது.
 
தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை பொதுமக்கள் ஆன்லைன் மூலம் டோக்கனை பதிவு செய்துகொள்ளலாம் இந்த இந்த டோக்கன் பதிவு நடைமுறை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவித்துள்ளனர்.
அதேபோல் அரசு மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசி சொல்வதற்கு இந்த நடைமுறை தேவை இல்லை அங்கு எப்போதும் போல பொதுமக்கள் சென்று தடுப்பூசியை போட்டு கொள்ளலாம் இனிமேல் தடுப்பூசி பதிவு டோக்கன் பெறமால் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்த இயலாது என்றும் கூறப்பட்டுள்ளது.