கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்தது.. ஒரு கிலோ தக்காளி ரூ.65 ரூபாய்க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், முன்பைக்காட்டிலும் தக்காளி விலை சற்று குறைந்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில்  தக்காளி விலை குறைந்தது.. ஒரு கிலோ தக்காளி ரூ.65 ரூபாய்க்கு விற்பனை

கோடை வெயில், வரத்து குறைவு போன்ற காரணங்களால், தக்காளி விலை உச்சத்தை தொட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்காளி 110 ரூபாய்க்கு விற்பனையானது. அதன்பின்பு, தக்காளி விலை ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ தக்காளி 65 ரூபாய் வரை விற்கிறது. தக்காளி விலை சற்று குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், மற்ற காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. கேரட், பீட்ரூட் ஆகியவை தலா 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 35 ரூபாய்க்கும், கத்தரிக்காய், வெண்டைக்காய் தலா 30 ரூபாய் வரை விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் விலை குறைந்த பின்பு காய்கறிகளின் விலை குறையாமல் இருப்பது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை காரணம் காட்டி உடனடியாக காய்கறிகளின் விலையை அதிகரிக்கும் வியாபாரிகள், எரிபொருள் விலை குறைந்த பின்னும் காய்கறி விலையை குறைக்காதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.