பசுமை பண்ணை கடைகளில் தக்காளி கிலோ 79 ரூபாய்க்கு விற்பனை..!!

தக்காளி விலையை கட்டுபடுத்தும் விதமாக பசுமை பண்ணையில், தக்காளி ஒரு கிலோ 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பசுமை பண்ணை கடைகளில் தக்காளி கிலோ 79 ரூபாய்க்கு விற்பனை..!!

தக்காளி விலையை கட்டுபடுத்தும் விதமாக பசுமை பண்ணையில், தக்காளி ஒரு கிலோ 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து, விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.

இதனால், இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தநிலையில், தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில், பசுமை பண்ணை காய்கறி கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், பசுமை பண்ணை கடைகளில் கிலோ 79 ருபாய்க்கு  தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்ய நாளொன்றுக்கு 15 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படும் என்றும், பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் அனைத்து காய்கறிகளுடன் தக்காளி கிலோ 79 ரூபாய்க்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.