நாளை பக்ரீத் பண்டிகை..! களைகட்டும் ஏற்பாடுகள்..!

நாளை பக்ரீத் பண்டிகை..! களைகட்டும் ஏற்பாடுகள்..!

பக்ரீத்  பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் 500 -க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

இறைவனின் தூதரான இப்ராஹீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாகர்கோயில் காதர் மருத்துவமனை அருகில் உள்ள புதுத் தெரு மஸ்ஜிதுல் அஸ்ரப்  பள்ளி வாசலில்  இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். 

இந்நிலையில், இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த காதர் ஆஸ்பத்திரி மஸ்திதுல் அஸ்ரப் புதுத்தெரு பள்ளிவாசலில் ஏராளமான முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர் மேலும் ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்து தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.

நேற்று அரபா தினம் என்பதால் உலகில் உள்ள ஹாஜிகள் அனைவரும் மெக்கா சென்று அங்கு ஹஜ் கடமையை நிறைவு செய்ததை ஒட்டி இன்று  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் காதர் ஆஸ்பத்திரி அருகாமையில் உள்ள மஸ்ஜிதுல் அஸ்ரப் புதுத்தெரு பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். மேலும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்தனர் இதில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய கூட்டாக இணைந்து தொழுகையில் ஈடுபட்டனர்.

அதோடு, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராணிப்பேட்டை வாரசந்தையில்  2 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ராணிப்பேட்டை வார சந்தை மைதானத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆடு விற்பனை களைக்கட்டியது. அதிகாலை முதலே உள் மாவட்டம்  வெளி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். குறைந்தபட்சமாக 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை உடல் எடை மற்றும் ரகங்களுக்கு ஏற்றவாறு விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு ஆடுகள் விற்கப்பட்டது.

இதையும் படிக்க     |