கொட்டி தீர்க்கும் கனமழை - நீரில் மூழ்கிய விளைநிலங்கள்!

நாகையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நேரடி விதைப்பு செய்த சுமார் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது. 

நேற்று காலை முதலே நாகை, கீழ்வேளூர், காக்கழனி, வடுகச்சேரி, வேளாங்கண்ணி, திருப்பூண்டி, கீழையூர், திருக்குவளை, வலிவலம், நாகூர், திருமருகல், திட்டச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் உள் கிராமங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் நேரடி விதைப்பு செய்து பத்து நாட்களே ஆன சம்பா இளம் பயிர்கள் நீரில் மூழ்கி குளம் போல் காட்சியளிக்கிறது. 

இதையும் படிக்க : குரூஸ் பர்னாந்தீஸ் திருவுருவச் சிலை திறப்பு...!

இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், வேளாண்மை துறை அதிகாரிகள் பயிர் பாதிப்பை ஆய்வு செய்து மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.