சுருளியில் குளிக்க அனுமதி...மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்...!

சுருளியில் குளிக்க அனுமதி...மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்...!

வனவிலங்குகளின் வருகை காரணமாக சுருளி அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை வனத்துறையினர் நீக்கி உள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சுருளி அருவி வனப்பகுதியில், யானை, காட்டெருமை, மான், கரடி போன்ற விலங்குகள் நடமாட்டம் இருப்பது வழக்கம். 

வனத்துறை தடை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை இன்றி காணப்பட்ட சுருளி அருவியில், வனச்சாலையில் குட்டிகளுடன் கூடிய எட்டு யானைகள் முகாமிட்டு இருந்தது . இதனால் சுருளி அருவிக்கு  சுற்றுலா பயணிகள் செல்வதற்கான தடை நீடித்தது .

இதையும் படிக்க : ஹைய்யா.. எனக்கு டைவர்ஸ் ஆகிடுச்சு... கொண்டாட்டத்தில் இறங்கிய பெண்...!

கடந்த இரண்டு தினங்களாக சுருளி அருவி நீர் பிடிப்பு பகுதிகளான  தூவானம் அணை  அரிசி பாறை ஈத்தக்காடு பகுதிகளில்  கனமழை  காரணமாக சுருளி அருவியில் நீர் வரத்து  தொடங்கியது .

மேலும் சுருளி அருவியில் முகாம் இட்டு இருந்த யானைகளும் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்ததால் சுருளி அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதித்து வருகின்றனர். 

சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பதற்காக விடுமுறை நாட்களில்   மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுருளி அருவிக்கு வந்து சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்துவிட்டு செல்கின்றனர்   .