கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

தமிழகத்தில் சில தினங்களாகவே வெய்யிலின் தாக்கம் சுட்;டெறித்து வருகிறது,வெய்யிலை சமாளிக்க பொதுமக்கள் நீர்நிலைகளை தேடி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையில் நீர் அருவி போல கொட்டுவதால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். 

அந்தவகையில், ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை, மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பலர் குடும்பம், குடும்பாக வந்து அருவியில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதே போல் வெளி மாநிலங்கள் இருந்தும்  சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து இருந்தனர்.

இதையும் படிக்க | தொடர் விடுமுறையால் ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

கோடை வெய்யிலில் இருந்து தப்பிக்கும் வகையில் ஆனந்தமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்., மேலும் பரிசல் பயணம் மேற்கொண்டு பூங்காவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை  விளையாடி மகிழ்ந்தனர். மற்றும் தங்கள் கொண்டு வந்த உணவுகளை உண்டும்,  கடைகளில் விற்கப்படும் பொறித்த மீன்களின் வாங்கி உண்டும் சுற்றுலா பயணிகள் தங்கள் பொழுதை குடும்பத்துடன் கழித்து வருகின்றனர்,.

சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்படுவதால் நீர்வளத்துறை சார்பில் ஆழமாக பகுதிக்கு செல்ல வேண்டாம் என ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து வந்தனர்.  மேலும்,  பங்களாபுதுர்,கடத்தூர்  பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 இதையும் படிக்க  | ஊத்தங்கரை அருகே நடைபெற்ற ஆணவ படுகொலையை கண்டித்து.... விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்! !