காட்டுயானையை தொந்தரவு செய்த சுற்றுலா பயணிகள்......கோபமடைந்து வாகனத்தை துரத்திய யானை

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் சுற்றுலா பயணியின் வாகனத்தை காட்டு யானை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காட்டுயானையை தொந்தரவு செய்த சுற்றுலா பயணிகள்......கோபமடைந்து வாகனத்தை துரத்திய யானை

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானை புலி சிறுத்தை மான் காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. அங்கு குறிப்பாக சாலையோரங்களில் அடிக்கடி யானைகள் தண்ணீர் அருந்துவதற்காக வருவது வழக்கம்.அப்படி வரும் யானைகளை பொதுமக்கள் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்து வருகிறது. இருப்பினும் இதனை கேட்காமல் ஒரு சிலர் அத்துமீறி செயல்படுகின்றனர்.

இந்நிலையில் மசினகுடியிலிருந்து மாயார் செல்ல்லும் சாலையில் யானைகள் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த சுற்றுலா பயணிகள் யானைகளை புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது திடீரென கோபமடைந்த யானை வாகனத்தை நோக்கி தூரத்தி வந்து தாக்க முயற்சித்துள்ளது.

அப்போது சுதாரித்துக்கொண்ட வாகன் ஓட்டி சாதுரியமாக செயல்பட்டு வாகனத்தை எடுத்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.