பாரம்பரிய முறையில் நடந்த மீன்பிடி திருவிழா- 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு

பாரம்பரிய முறையில் நடந்த மீன்பிடி திருவிழாவில், 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

பாரம்பரிய முறையில் நடந்த மீன்பிடி திருவிழா- 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கண்மாய் மடை பராமரிப்பு நிதிக்காக பாரம்பரிய முறையில் நடந்த மீன்பிடி திருவிழாவில், 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கூடை கூடையாக மகிழ்ச்சியுடன் மீன்களை அள்ளிச் சென்றனர்.

திருப்பத்தூர் அடுத்த ஆவணிப்பட்டி பெரிய கண்மாய் மடை பராமரிப்புக்கு நிதி திரட்ட ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடைபெறும். கடந்த ஆண்டு பெய்த கனமழையால் கண்மாய் பெருகியது. தொடர்ந்து விவசாய தேவைக்கு மழைநீரை பயன்படுத்தியதால் நீர் வற்றியது.

இதைதொடர்ந்து இன்று கிராம மக்கள் ஒற்றுமையாக மீன்பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முன்பணமாக 100 ரூபாய் செலுத்தியவர்கள் மீன்பிடித்தனர். அவர்களைத் தொடர்ந்து, கிராம மக்கள் கூடை கூடையாக மீன்களை பிடித்தனர். கண்மாயில் கிடைத்த விரா, கட்லா, ஜிலேபி ,கெளுத்தி மீன்களை கூடை கூடையாக பிடித்து சென்றனர்.