பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் போக்குவரத்துக்கு தடை...பொதுமக்கள் அவதி...!

பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் போக்குவரத்துக்கு தடை...பொதுமக்கள் அவதி...!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பாலம் பழுதடைந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

விரிசல் ஏற்பட்ட பாலம்:

திண்டிவனம் அருகே ஓங்கூர் பகுதியில் ஆற்றின் மேல் பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மீது  சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்கின்ற வாகனங்களும், திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வரும் ஆயிரக்கணக்கான வாகனங்களும் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.

உயிரை பணயம் வைத்து செல்லும் வாகன ஓட்டிகள்:

பாலத்தில் விரிசல் ஏற்பட்டதைதொடர்ந்து, வாகன ஓட்டிகள் வேறு வழியில் செல்லாமல் அந்த பாலத்தின் மீது தங்கள் உயிரை பணயம் வைத்து வாகனங்களை வேகம் குறைவாக ஓட்டிச் சென்றனர். இதையடுத்து, இந்த பிரச்சனை குறித்து தகவலறிந்து  துறை சார்ந்த அதிகாரிகள் அங்கு சென்று வாகனங்கள் செல்வதை தடை செய்தனர். 

மாவட்ட ஆட்சியர் ஆய்வு:

பாலம் விரிசல் குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உள்ளிட்ட  அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், பாலத்தின் பராமரிப்பு பணி நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும்,  பராமரிப்பு பணிகள் விரைவில் முடிவடைந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்  என்றும் கூறினார்.