காவலர்களுக்கு மன அழுத்தம் குறைப்பதற்கான பயிற்சி…

உலக மனநல நாளை முன்னிட்டு மன அழுத்ததிற்குள்ளான 105 காவலர்களுக்கு மன அழுத்தம் குறைப்பதற்கான பயிற்சியை காவல் ஆணையர் துவக்கி வைத்தார்.  

காவலர்களுக்கு மன அழுத்தம் குறைப்பதற்கான பயிற்சி…

சென்னையில் பணிபுரியக்கூடிய காவலர்களின் நலன் கருதி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்குதல், அனைத்து காவலர் குடியிருப்புகளிலும் இலவச மருத்துவ பரிசோதனை மையங்கள் என பல்வேறு நலத்திட்டங்களை காவல் ஆணையரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து உலக மன நல நாளை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, மத்திய குற்றப்பிரிவில் பணிப்புரியக்கூடிய மன அழுத்தத்திற்குள்ளான காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையிலான பயிற்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்து மன அழுத்தத்திற்குள்ளான 105 காவலர்களிடம் பேசி குறைகளை கேட்டறிந்து மன அழுத்தத்தை போக்கும் வகையில் அறிவுறுத்தினார்.

பின்னர் மன அழுத்தம் ஏற்பட்ட காவலர்களுக்கு மாஸ்டர் மைண்ட் பவுண்டேஷன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர்கள் லட்சுமி, அபிலாஷா, சுஜாதா, அபிஷேக் ஆகியோர் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பயிற்சி  அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் தலைமையிட துணை ஆணையர் பாலாஜி சரவணன், உதவி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.