தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் ...!

தமிழ்நாட்டில்  6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் ...!

தமிழ்நாட்டின்  6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா, நீலகிரி மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் செயலராக இருந்த ராஷ்மி சித்தார்த் ஜகடே சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநராக ஹனிஷ் சாப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும்  படிக்க  |  ”அமெரிக்க அதிபரை போன்று வர மோடி முயற்சிக்கிறார்” - அமைச்சர் துரைமுருகன்