ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வீரப்பனை பிடிக்கச் சென்ற அதிரடிப் படையினர் களம்

சிங்காரா வனப்பகுதியில் பதுங்கியுள்ள ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில், வீரப்பனை பிடிக்க வனப்பகுதிக்குள் சென்ற அதிரடிப் படையினர் 10 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை தமிழ்நாடு வனத்துறை கல்லூரியில் வன உயிரின வார நிறைவு விழாவில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் சண்முகசுந்தரம், நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராமச்சந்திரன், முதலமைச்சர் உத்தரவின் பேரில், கோவையில் 33 சதவீதம் வனப் பகுதிகளை அதிகப்படுத்தவும், விலங்குகளுக்கான உணவு உற்பத்தி செய்யும் மரங்களை வளர்க்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறினார்.

சிங்காரா வனப்பகுதியில் பதுங்கியுள்ள ஆட்கொல்லி புலியை பிடிக்க, நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட உபகரணங்களை வனத்துறையினர் பயன்படுத்தி வருவதாகக் கூறிய அமைச்சர், வீரப்பனை பிடிக்க வனப்பகுதிக்குள் சென்ற அதிரடிப் படையினர் 10 பேர் தற்போது புலியை பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். ஆட்கொல்லி புலி விரைவில் பிடிபடும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.