"சிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் சேர்க்க முயற்சி..." - மத்திய இணை அமைச்சர் நிஷித் பிரமானிக்

"சிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் சேர்க்க முயற்சி..." - மத்திய இணை அமைச்சர் நிஷித் பிரமானிக்

சிலம்பம் உள்பட பாரம்பரிய விளையாட்டுகளை ஒலிம்பிக்போட்டியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய இணை அமைச்சர் நிஷித் பிரமானிக் கூறியுள்ளார்.

கன்னியாகுமரியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில், பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை இணை அமைச்சர் நிஷித் பிரமானிக் வருகை தந்தார். நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில், மத்திய அரசின் சார்பில் செயப்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர், பிரதம மந்திரி ருத்ரா யோஜனா திட்டம் உட்பட பல்வேறு மத்திய அரசின் கீழ் நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும், குமரி மாவட்டத்தில் உள்ள 95 ஊராட்சிகளில் மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கிராம ஊராட்சி பகுதிகளில் இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 50 சதவீத வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றும், 3 மாதத்திற்குள் வீடுகள் கட்டும் பணி முடிவடையும் என்றும் கூறியுள்ளனர். மேலும், பேரூராட்சி பகுதிகளில் நான்கு தவணைகளாக பணம் வழங்கப்பட்டு வீடு கட்டப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர்.

பின்னர் மத்திய இணை அமைச்சர் பேசுகையில், கொரோனாவுக்கு பின்பும், உக்ரைன், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைக்கு மத்தியிலும் இந்தியா அமைதியான நாடாக திகழ்கிறது,
சிலம்பம் மட்டுமல்ல நம் பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்தையும் ஒலிம்பிக்கில் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும், எதிர்காலத்தில் இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அனைத்து துறைகளும் திட்டமிட்டு செயல்படும் என்றும் மாநிலங்களின் திட்டங்களின் அடிப்படையில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை என்றும் பேசினார்.