"மாற்றுத்திறனாளிகள் நல ஆணையராக ஐ.ஏ.எஸ்" நன்றி தெரிவித்த உதயநிதி!

"மாற்றுத்திறனாளிகள் நல ஆணையராக ஐ.ஏ.எஸ்" நன்றி தெரிவித்த உதயநிதி!

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ஐ.ஏ.எஸ் நிலை அதிகாரியை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையராக நியமித்து வரலாறு படைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் டுவீட் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 32 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர். இதில் மாவட்ட ஆட்சியர்கள், பதிவுத்துறை தலைவர், நிதித்துறை இணை செயலாளர் போன்ற 32 முக்கிய பதவிகளுக்கு நேற்று ஒரே நாளில் 32 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.அதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையராக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆணையராக இருந்த ஜெசிந்தா லாசரஸ் நியமிக்கப்பட்டார்.ZOGAM.COM - Zogam Thupuak | 17 August, 2012

இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ஐஏஎஸ் நிலையிலான அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், "மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்துக்கு தனிப்பொறுப்புடன் கூடிய ஆணையர் வேண்டுமென சட்டமன்ற கன்னிப்பேச்சில் வலியுறுத்தினோம். அந்த வகையில், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக IAS நிலை அதிகாரியை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையராக நியமித்து வரலாறு படைத்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. மாற்றுத்திறனுடையோர் உரிமைகள் வெல்லட்டும்" என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை மாற்றுத்திறனாளிகள் உட்பட பலரும் ரீட்விட் செய்து பரவலாக பகிர்ந்து வருகின்றனர்.