எதை எதை யாரிடமிருந்து கற்றுக் கொண்டேன் எனக் கூறிய உதயநிதி...!!!

எதை எதை யாரிடமிருந்து கற்றுக் கொண்டேன் எனக் கூறிய உதயநிதி...!!!

ஆன்லைன் ரம்மி, நிலக்கரி சுரங்கம் திட்டம் ரத்து என்று இரண்டு சிக்சர்களை அடித்து அணியின் கேப்டனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 நியாயமான ரெப்ரி:

பேரவையில் விளையாட்டு போட்டிகளின் துணுக்கங்களை தெரிவித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மானியக்கோரிக்கை மீதான பதிலுரையை தொடங்கினார்.  மாமன்றத்தின் நியாயமான ரெப்ரியாக பேரவை தலைவர் செயல்படுவதாகவும், யார் யாரோ தமிழ்நாட்டை வெல்லலாம் என்று நினைத்து அதற்கான முயற்சி செய்வதாகவும், ஆனால் வடக்கில் இருந்து வந்த யாரும் இங்கு வென்றது இல்லை எனவும் கூறினார்.  

எதை? எதை?:

இதற்கு காரணம் திமுக என்ற வலுவான அணியும் ஸ்டாலின் என்ற கேப்டன் இருப்பதும் தான் என்று  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய அமைச்சர், எந்த நேரத்தில் யாருடன் மோத வேண்டும் என பெரியார் சொல்லிக் கொடுத்து இருப்பதாகவும், ஒற்றுமையுடன் எப்படி இருக்க வேண்டும் என்று அண்ணா சொல்லிக் கொடுத்துள்ளதாவும், எந்த பந்தை அடிக்க வேண்டும்; எந்த பந்தை அடிக்கக்கூடாது என்று  கலைஞர் சொல்லிக் கொடுத்துள்ளார் எனவும் தெரிவித்தார்.  அதனோடு எப்போதெல்லாம் டிபன்ஸ் ஆட வேண்டும்; எப்போதெல்லாம் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று முதலமைச்சர முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்லிக் கொடுத்துள்ளார்  எனவும் கூறினார்.  

இரண்டு சிக்சர்:

ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவிற்கு நேற்று ஒரு சிக்சரை அடித்த முதலமைச்சர், டெல்டா நிலக்கரி சுரங்கம் ரத்து  என அண்மையில் இரண்டு சிக்ஸர்களை விளாசியுள்ளார் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ரஷ்யாவின் ஆபத்தான எரிமலை வெடிப்பு....!!