விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க ரூ.25,000 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர்..!

லஞ்சம் பெறும் போது கையும் களவுமாக பிடிபட்டார்..!

விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க ரூ.25,000 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர்..!

காஞ்சிபுரத்தில் வரதட்சணை வழக்கில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க ரூ.25,000 லஞ்சம் வாங்கியதாக, பெண் இளநிலை உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் பகுதியை சேர்ந்த மென்பொருள் பொறியாளர்கள் கிருஷ்ண பிரசாத் - அர்ச்சனா தம்பதியினர், குடும்பத்தகராறு காரணமாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்திற்கு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். இதில் கிருஷ்ண பிரசாத்திற்கு சாதகமாக விசாரணை அறிக்கை அளிக்க, சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்சம் கேட்டுள்ளனர். 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக பேசி, அலுவலகத்தில் தொகுப்பூதிய இளநிலை உதவியாளராக பணிபுரியும் பிரேமா என்பவரிடம் ரூ.25,000 லஞ்சம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பிரேமாவை கையும் களவுமாக கைது செய்தனர்.