VAO வெட்டி கொலை - நேரில் சென்று எம்.பி. கனிமொழி குடும்பத்துக்கு ஆறுதல்

VAO  வெட்டி கொலை - நேரில் சென்று எம்.பி. கனிமொழி  குடும்பத்துக்கு ஆறுதல்

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்டதைத்  தொடர்ந்து அவர் உடல் வைக்கப்பட்டுள்ள நெல்லை அரசு மருத்துவமனையில் அவரது உடலை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் , கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.


தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் இன்று பிற்பகலில் இரண்டு மர்ம நபர்களால் வெட்டி  கொலை செய்யப்பட்டார். அவரது உடல் வைக்கப்பட்டுள்ள நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ்.ஆர் ராமச்சந்திரன், கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் நேரில் வந்து அவரது உடலை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்திற்கு ஆறுதலும் கூறினர் தொடர்ந்து வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தனது சொந்த நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் அவரது குடும்பத்திற்கு வழங்கினார் முன்னதாக கனிமொழி எம்பி செய்தியாளர் அளித்த பேட்டியில்

    மிகச் சிறப்பாக தன்னுடைய பணியை செய்யக்கூடிய அதிகாரிக்கு நேர்த்த சம்பவம் மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. தமிழக முதலமைச்சர் இந்த சம்பவத்தை கண்டித்து உயிரிழந்த விஏஓ குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார். விரைவில் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவார்கள்  காவல்துறை அதிகாரிகளும் நடவடிக்கை குறித்து உறுதி அளித்துள்ளனர்
இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு சரியான தண்டனை தரப்படும்  என கூறினார்.

மேலும் படிக்க | சென்னை மாநகராட்சி மக்களுக்கு ஓர் நற்செய்தி : மக்களை தேடி மேயர்!!!!
 இந்த நிகழ்வில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளராக ஆவுடையப்பன் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மேயர் ஜெகன் நெல்லை மேயர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்