VAO கொலை : முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

VAO கொலை : முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

விஏஓ கொலை : குடும்பத்தினருக்கு தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் ஆறுதல்

முறப்பநாடு அருகே விஏஓ கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது குடும்பத்தினரை சந்தித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆறுதல் கூறினார். 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் இன்று தனது அலுவலகத்தில் வெட்டப்பட்டதில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு அன்னாரது குடும்பத்தினருக்கு அறுதல் கூறினார். 

பின்னர் ஆட்சியர் கூறும் போது, "கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் ஆதிச்சநல்லூர் பகுதியில் 4 ஆண்டுகள் விஏஓவாக பணியாற்றியுள்ளார். மேலும் அங்கு அருங்காட்சியகம் அமைக்க நிலங்களை மீட்டு கொடுத்துள்ளார். மிகவும் நேர்மையாகவும் துனிச்சலுடனும் பணியாற்றியவர். தற்போது முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலகராக பணியாற்றிய நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவரது குடுமபத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். 

மேலும் படிக்க | மனைவியை தகாத வார்த்தைகளால் பேசிய நண்பரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை


பணியிலிருந்தபோது தாக்கப்பட்டு மரணமடைந்த தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் திரு. லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒருகோடி ரூபாய் நிதியுதவி; கருணை அடிப்படையில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி -  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உத்தரவு!