சனிக்கிழமை 6-ம் கட்ட தடுப்பூசி முகாம்... 100 சதவீத இலக்கை எட்ட உத்தரவு...

ஆறாம் கட்ட தடுப்பூசி முகாமில்,  100 சதவிகித இலக்கை எட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

சனிக்கிழமை 6-ம் கட்ட தடுப்பூசி முகாம்... 100 சதவீத இலக்கை எட்ட உத்தரவு...

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் மூலம் பல லட்சம் பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ள நிலையில், மக்கள் மத்தியில் இந்த சிறப்பு முகாம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அது மட்டும் அல்லாமல், நிர்ணயம் செய்யப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் சனிக்கிழமை இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அன்றைய தினத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நோய் அதிகரித்து வரும் மாவட்டங்களை கண்டறிந்து தடுக்கும் நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்  தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகராட்சி ஆணையர்  ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, ஆறாம் கட்ட தடுப்பூசி முகாமில்,  100 சதவிகித இலக்கை எட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.