எங்கு தெரியுமா.. சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி.. சுகாதாரத்துறை அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்!

12 முதல் 15 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை சென்னையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தொடங்கி வைக்க உள்ளார்.

எங்கு தெரியுமா.. சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி.. சுகாதாரத்துறை அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்!

கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கப்பட்டது. அப்போது முன்கள பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கடந்த ஜனவரி மாதம் 3-ந்தேதி முதல் 15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் 12 முதல் 15 வயதுடைய சிறுவர்களுக்கு இன்று முதல் புதிய தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது. இந்த புதிய தடுப்பூசியின் பெயர் 'கோர்பேவேக்ஸ்'. 12 வயது பூர்த்தியான சிறுவர்கள் இத்தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இத்திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது.

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் பணி இன்று துவங்கி வரும் 25-க்குள் நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு பொது சுகாதாரத்துறையினர் நேரில் சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் தமிழகத்தில் 12 முதல் 15 வயதுடைய சிறுவர்களுக்கு இன்று தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது. இந்த வயது பிரிவில் சுமார் 31 லட்சம் பேர் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  12 முதல் 15 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை சென்னையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தொடங்கி வைக்க உள்ளார்.

இதேபோல், புதுச்சேரியில் இன்று காலை தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் ரங்கசாமி  தொடங்கி வைக்கிறார். இதற்காக 56 ஆயிரம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் புதுச்சேரிக்கு வந்துள்ளன.