சென்னையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைப்பு!

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுபாடு நிலவி வரும் நிலையில் இன்று சென்னையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

சென்னையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைப்பு!

தமிழகத்தில் கொரொனா பாதிப்பின் இரண்டாம் அலை படிபடியாக குறைந்து வரும் நிலையில் கொரொனாவை முற்றிலுமாக குறைக்க தடுப்புசி மட்டுமே ஒரே ஆயுதமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தடுப்பூசி தட்டுப்பாடு தமிழகத்தில் நிலவி வருகிறது.

தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கு 71 லட்சம் தடுப்பூசிகள் வழங்குவதாக மத்திய அரசு தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது வரை உள்ள 32 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது வரக்கூடிய அனைத்து தடுப்பூசிகளும் முற்றிலுமாக பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த தடுப்பூசி வந்தால் மட்டுமே அதன் பணி தொடங்கும் என்று சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கம் தடுப்பூசி மையத்தை தடுப்பூசி இல்லை என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்த வரும் பொதுமக்கள் தடுப்பூசி இல்லை என்ற பெயர்ப்பலகை பார்த்து ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர்.

மேலும் தமிழகத்திற்கு தற்போது வரையிலும் 1,80,42,480 தடுப்பூசி வந்திருக்கும் நிலையில் நேற்று வரையும் 1,80,03,527 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் 28,40,060 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.