வைகாசி வசந்த உற்சவ விழா.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று கோலாகல துவக்கம்!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவ விழா இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.

வைகாசி வசந்த உற்சவ விழா.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று கோலாகல துவக்கம்!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடந்தோறும் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதன்படி மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவ விழா கோலாகலமாக தொடங்கியது.

இதையொட்டி புதுமண்டபத்தில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரரை ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின்போது தினமும் மாலை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பாடாகி புது மண்டபம் சென்று பின்னர் 4 சித்திரை வீதிகளில் வலம் வருவார்.

விழாவின் நிறைவு நாளான 12-ந் தேதி காலையில் சுந்தரேசுவரர்-மீனாட்சி புது மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அன்றைய நாள் முழுவதும் அங்கு இருக்கும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும். மாலையில் மீண்டும் சன்னதிக்கு திரும்புகிறார்கள்.

வைகாசி வசந்த உற்சவம் திருவிழாவின்போது உபய தங்கரதம், உபயதிருக்கல்யாணம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறாது என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.