மதிமுகவின் தலைமை கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ தேர்வு

மதிமுகவின் தலைமை கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மதிமுகவின் தலைமை கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ தேர்வு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம் கட்சியின் தலைமையகமான தாயகத்தில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தின் முடிவில் வைகோவின் மகன் துரை வைகோவிற்கு மதிமுகவில் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது . இதற்கான நடைபெற்ற வாக்கெடுப்பில் 104 வாக்குகள் துரை வைகோவிற்கு ஆதரவாகவும் , இரு வாக்குகள் எதிராகவும் பதிவானது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், 

2 ஆண்டுக்கு முன்பே துரை வைகோ அரசியலுக்கு வரமாட்டார் என கூறினேன்.ஆனால்  எனக்கே தெரியாமல் அவர் கழகப் பணி ஆற்றி வந்துள்ளார் என்றார்.

துரை வைகோ கட்சிப் பணியாற்ற வாய்ப்பு வழங்க வேண்டுமா என  வாக்குச் சீட்டு முறையில் இன்று ரகசிய வாக்கெடுப்பு நடத்தினோம். கட்சியில்  நியமன பதவியை விரும்பியவர்களுக்கு வழங்க பொதுச் செயலாளருக்கு அதிகாரம் உண்டு என்றாலும் , எதிர்காலத்தில் இது முக்கியத்துவம் பெறும் என்பதால்  தேர்தல் நடத்தினோம் என கூறினார்.

இன்று 106 வாக்கு பதிவானது , 104 வாக்கு துரை வைகோவிற்கு கட்சியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், 2 வாக்கு வாய்ப்பு வழங்க வேண்டாம் எனவும் பதிவானது என்றும்

இதன் மூலம் துரை வைகோ இனி  முழு நேர கழகப் பணியாற்றுவார் , தலைமையகத்திற்கு வந்து கடிதங்களை படிக்கலாம், மாவட்டங்களின் கட்சி பணிகளை மேற்பார்வையிடலாம் , மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்யலாம் என்றார்.

மேலும் அவரது தேர்வு வாரிசு அரசியல் ஆகாது என்று வைகோ திட்டவட்டமாக தெரிவித்தார்.