ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு மனுவை விரைந்து விசாரிக்க வேதாந்தா நிறுவனம் புதிய மனு தாக்கல்...

வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீடு மனுவை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அந்நிறுவனம் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு மனுவை விரைந்து விசாரிக்க  வேதாந்தா நிறுவனம் புதிய மனு தாக்கல்...

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் வேதாந்தா நிறுவனம் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

அதில், தூத்துக்குடி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதன் காரணமாக வெள்ள நீர் ஆலையை சூழ்ந்துள்ளதாகவும், இதனால் ஆலையில் உயர் ரக பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் துருப்பிடித்து சேதமாகும் நிலை உருவாகியுள்ளதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் போது ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றம் அனுமதி பெற்று திறக்கப்பட்டது. அதற்கு வழங்கப்பட்ட காலக்கெடு ஜூலை 31-ம் தேதியோடு முடிந்த நிலையில் அதன் பின்னர் ஆலை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.