மக்களின் முயற்சியால் புத்துயிர் பெற்ற வேலூர் நாகநதி: பிரதமர் மோடி பாராட்டு...

மக்களின் தீவிர முயற்சியால், வேலூரில் வறண்டு காணப்பட்ட நாக நதி, மீண்டும் புத்துயிர் பெற்று மக்களுக்கு தண்ணீர் வழங்கும் நதியாக மாறியுள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

மக்களின் முயற்சியால் புத்துயிர் பெற்ற வேலூர் நாகநதி: பிரதமர் மோடி பாராட்டு...

மன் கி பாத்’ என்ற மனதின் குரல் நிகழ்ச்சி மூலம், பிரதமர் மோடி ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்று கிழமைகளில் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். அந்தவகையில் 81வது மன் கி பாத் நிகழ்வான இன்று, ஆறுகளின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்து மோடி உரையாற்றினார். அப்போது சர்வதேச ஆறுகள் தினமான இன்று, ஆறுகளை தூய்மையாக பேணி பாதுகாக்க உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அதுமட்டுமல்லாது அவற்றை தூய்மையாக வைத்துக்கொள்வதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். 

உரையாடலின் போது, தனக்கு கிடைக்கும் பரிசு பொருட்கள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுவதை குறிப்பிட்ட அவர், அப்பணத்தில் கங்கை நிதியை தூய்மைப்படுத்தவும், அதுசார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும்  உள்ளதாக கூறினார். 

ஆறுகளில் போதிய நீர் வரத்து இல்லாததால், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்ளில் வறட்சி நிலவுவதாகவும் மோடி தெரிவித்தார். இதனை போக்க, குஜராத் மக்கள் மழைக்காலங்களின் தொடக்கத்தில் ‘மழைநீரை பிடி’ என்ற சிறப்பு நிகழ்வை அனுசரிப்பர் எனவும் கூறினார். 

நிகழ்ச்சியில் தேச தந்தை மகாத்மா காந்தியை குறிப்பிட்டு பேசிய மோடி, அவர் தூய்மை திட்டத்தை முன்னெடுத்து மக்களை ஒருங்கிணைத்ததாக கூறினார். இதுவே எதிர்காலத்தில் சுதந்திரத்திற்கு வித்திட்டதாகவும் மோடி தெரிவித்தார். காந்தியை கவுரவப்படுத்தும் விதமாக அவரது பிறந்த தினத்தில் கதர் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுவோம் எனவும் கேட்டுக்கொண்டார்.