மீந்து போன பழைய பரோட்டாவை ஊறவைத்து..? இணையத்தில் வைரலாகிவரும் வீடியோ...

முதல்நாள் மீதமான புரோட்டாவை காலையில் தண்ணீரில் ஊறவைத்து சூடாக்கி வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் பெரியகுளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மீந்து போன பழைய பரோட்டாவை ஊறவைத்து..? இணையத்தில் வைரலாகிவரும்  வீடியோ...

தேனி மாவட்டம் பெரியகுளம் பேருந்து நிலையம் செல்லும் வழியில் உள்ளது சின்னத்தம்பி என்பவருக்குச் சொந்தமான பாக்யா ஹோட்டல். இந்த ஹோட்டலில் உள்ள புரோட்டா மாஸ்டர் முதல் நாளில் விற்பனையாகாமல் மீதமான பழைய பரோட்டாக்களை இரண்டு பாத்திரங்களில் சேகரித்து காலையில் தண்ணீரில் முக்கி ஊறவைத்து,  தோசைக்கல்லில்  மீண்டும் சூடேற்றி புதிதாக போடப்பட்ட புரோட்டா போல தயார் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே மைதா மாவினால் தயார் செய்யப்படும் புரோட்டாக்களை உண்ணக் கூடாது என்றும், அதனால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது என்று கூறப்பட்டு வரும் நிலையில், முதல்நாள் மீதமான புரோட்டான்களை நீரில் ஊறவைத்து சூடேற்றி வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தைப் பற்றி கவலையில்லாமல் லாப நோக்கில் சுகாதாரமற்ற புரோட்டாக்களை விற்பனை செய்து வரும் சம்பவம் பெரியகுளம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற புரோட்டாக்களை உண்ணும் நபர்களுக்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.  இதனால் உடனடியாக அந்தக் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அந்த கடைக்கும் சீல் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.