வெள்ளாடுகளை வளர்க்க தடை விதித்த கிராமம்...

புதுக்கோட்டை அருகே வெள்ளாடுகள் வளர்க்க தடை விதித்ததால், மரம், செடி, கொடிகள் செழித்து வளர்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

வெள்ளாடுகளை வளர்க்க தடை விதித்த கிராமம்...

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே முனசந்தை கிராமம் அமைந்துள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் பொருளாதாரத்திற்காக, வீட்டிற்கு இரண்டு ஆடுகளையாவது வளர்த்து வருவது வழக்கம். இந்த ஆடுகள், செடி, கொடிகள், பயிர்கள், மரக்கன்றுகளை உண்பதால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தது.

இதனால், கிராம மக்கள் வேதனை அடைந்து, இனி வெள்ளாடுகளை வளர்ப்பதில்லை என முடிவெடுத்தனர். இந்த முடிவுக்கு கட்டுப்பட்ட கிராம மக்கள், ஆடுகளுக்கு பதிலாக பால் கறக்கும் மாடுகளை வளர்த்தனர்.

இந்நிலையில், தற்போது, கிராமத்தில் ஆடுகளே இல்லாத நிலையில், விவசாயம் நன்று செழித்து வளர்ந்துள்ளது. சாலையோரங்களில், மரங்களும் நன்கு வளர்ந்துள்ளன. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.