விருதுநகர்: வெள்ளத்தில் சிக்கிய 2000க்கு மேற்பட்ட பக்தர்கள் மீட்பு!!

விருதுநகர்: வெள்ளத்தில் சிக்கிய 2000க்கு மேற்பட்ட பக்தர்கள் மீட்பு!!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சதுரகிரி கோயிலுக்கு சென்றுவிட்டு காட்டாற்று வௌ்ளத்தில் சிக்கிய 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மீட்கப்பட்டனர்.

ஆடி அமாவாசை: வெள்ளப்பெருக்கு

ஆடி அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு தேனி மாவட்டத்தில் உள்ள உப்புத் துறை மலைப்பாதை வழியாக பக்தர்கள் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று சென்ற நிலையில், நள்ளிரவு திடீரென கனமழை பெய்தது. இதனால்  யானைக்கஜம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கிக்கொண்டனர்.

2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மீட்பு:

இதனிடையே பக்தர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த போலீசார்,  மயிலாடும்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து கயிறு மூலம் போலீசாரும் தீயணைப்பு துறையினரும் சேர்ந்து பக்தர்களை பாதுகாப்பாக மீட்டு கரை சேர்த்தனர். திடீரென ஏற்பட்ட காற்றாற்று வெள்ளத்தில் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கிக்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.