ஆர் எஸ் எஸ்க்கு விசிக தலைவர் மறைமுக ஆதரவா? தடா பெரியசாமி கூறியதென்ன?

ஆர் எஸ் எஸ்க்கு விசிக தலைவர் மறைமுக ஆதரவா? தடா பெரியசாமி கூறியதென்ன?

விசிக தலைவர் திருமாவளவன் ஆர் எஸ் எஸ் மற்றும் இந்து அமைப்புகளுக்கு மறைமுக ஆதரவு தருவதாக தடா பெரியசாமி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காலணிகளுக்குள் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புகளை கொண்டு செல்லும் நிகழ்ச்சி:

தர்மபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள  தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணியின் சார்பில் காலணிகளுக்குள் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புகளை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி, செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதையும் படிக்க: 6 வருடங்கள் முன்னாடியே.. நயன்-விக்கி பதிலால் அதிர்ந்த ரசிகர்கள்.. அப்போ லிவ்விங் டூ கெதர் இல்லையா?

சர்ச்சையாக பேசிய தடா பெரியசாமி:

அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறும் கருத்துகளால் இந்து அமைப்புகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக கூறிய அவர், ஆர் எஸ் எஸ் மற்றும் இந்து அமைப்புகளுக்கு திருமாவளவன் மறைமுக ஆதரவு தருவதாகவும் கூறினார். மேலும், பட்டியல் சமுதாயத்தை வைத்து ஆட்டம் போடும் திராவிட கட்சிகளை விரட்டுவது தான் பாஜகவின் நோக்கம் என்று கூறினார். இவருடைய இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.