ஏரியில் விஷமருந்து கலக்கப்பட்டதா..? பத்தாயிரம் மீன்குஞ்சுகள் இறப்பு...! கிருஷ்ணகிரியில் நிகழ்த்த சோகம்...!

ஏரியில் விஷமருந்து கலக்கப்பட்டதா..?   பத்தாயிரம் மீன்குஞ்சுகள் இறப்பு...!  கிருஷ்ணகிரியில் நிகழ்த்த சோகம்...!

ஊத்தங்கரை அருகே அழகன் ஏரியில் செத்து மிதக்கும் மீன் குஞ்சுகலால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதையடுத்து, ஏரியில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என  வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கெங்கப்பிராம்பட்டி ஊராட்சி அப்பிநாயக்கன்பட்டி கிராமம் உள்ளது. இந்த ஊராட்சிக்கு சொந்தமான அழகன்ஏரி உள்ளது. இந்த ஏரியில் பல ஆயிரக்கணக்கான பலவகை மீன்கள் உள்ளன. இந்த மீன்களை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அடிக்கடி பிடிப்பது வழக்கம். இந்நிலையில், இன்று காலை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அந்த ஏரி அருகே வரும்பொழுது மீன்குஞ்சுகள் இறந்து தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வட்டார வளர்ச்சிதுறை அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதனையடுத்து, தகவல் அறிந்து அங்கு வந்த ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாசம், ஊராட்சிமன்ற தலைவர் வெங்கடேசன் ஆகியோர் ஏரியில் மிதக்கும் மீன்களை ஆய்வு செய்து வருகின்றனர். சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீன்கள் இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும், இந்த ஏரியில் யாராவது இரவு நேரத்தில் விஷம் கலந்திருப்பார்களா,  அல்லது மீன்பிடிப்பதற்காக வெடிகுண்டு வீசி இருப்பார்களா என கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க } சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் சுற்றுலா கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.. ! - அமைச்சர் ராமசந்திரன்

மேலும்  100-க்கும் மேற்பட்ட விஷவகை பாம்புகளும் இறந்துகிடக்கின்றன. இதனையடுத்து, தண்ணீரில் மருந்து கலக்கப்பட்டதா..? என்று உறுதிசெய்ய தண்ணீரை ஆய்வு அறிக்கைக்கு அனுப்பி உள்ளனர். அப்பிநாயக்கன்பட்டி அழகன் ஏரியில்   மீன்கள் செத்து இருப்பதைக்கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 இதையும் படிக்க } அதிமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ஓபிஎஸ் சிறப்பாக செயல்பட்டார் என்றால் ....அதிமுகவினரே ஏற்றுக்கொள்வார்களா? - பி.டி.ஆர்.