ஏரியில் சாக்கடை கலந்த கழிவு நீர்...! மனித சங்கிலி போராட்டத்தில் பொதுமக்கள்....!

ஏரியில் சாக்கடை கலந்த கழிவு நீர்...!  மனித  சங்கிலி போராட்டத்தில்  பொதுமக்கள்....!

நாமக்கல் அருகே ஏரியில் சாக்கடை கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்தக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நாமக்கல் அருகே தூசூரில் 600 ஏக்கரில் ஏரி அமைந்துள்ளது, இந்த ஏரியின் மூலம் 1000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த நிலையில் தூசூர் ஏரியில் நாமக்கல்லில் இருந்து வரும் கழிவு நீர் ஏரியில் கலப்பதால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படுகிறது. 

மேலும், இதனால் நீர் வளமும், நிலவளமும் பாதிக்கின்றன, கால்நடைகளுக்கும் பயன்படாத நச்சு கலந்த நீராக மாறுகிறது, மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் தோல் வியாதிகள் ஏற்படும் அபாயம் உருவாக வாய்ப்புள்ளது. இந்த நிலையில் தூசூரில் ஏரியில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி தூசூர் ஏரிக்கரையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

 தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு ஏரியில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்திட வேண்டும் என வலியுறுத்தினர்.

 இதையும் படிக்க     |  நீலகிரியில் வியாபாரிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு!