நதிநீர் இணைப்பு திட்டப்பணிகள்...! அமைச்சர் துரைமுருகன் ஆய்வு...!!

நதிநீர் இணைப்பு திட்டப்பணிகள்...! அமைச்சர் துரைமுருகன் ஆய்வு...!!

நெல்லை மாவட்டம் பரப்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தாமிரபரணி நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்ட மூன்றாம் கட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் சுமார் 369 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட தாமிரபரணி, கருமேனியாரு, நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டம் வெள்ள காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்று நீரை புதிய கால்வாய் நெல்லை மாவட்ட பகுதிகளுக்கு திருப்பி விட்டு அப்பகுதிகள் செழிப்படைவதற்காக தொடங்கப்பட்டது.

இதன் மூன்றாம் கட்ட பணிகளை இன்று  நெல்லை மாவட்டம் பரப்பாடி அருகே பாண்டிச்சேரியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு,  நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆகியோர் பணிகள் குறித்து பார்வையிட்டனர். இதில் அமைச்சர் துரைமுருகன் இணைப்பு திட்ட மூன்றாம் கட்ட பணிகள் குறித்து  அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார். இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிக்க:மதுரையில் புறக்கணிக்கப்படுகிறாரா பி.டி.ஆர்?