வேகமாகச் சரியும் வைகை அணையின் நீர்மட்டம்.. கவலையில் பாசன விவசாயிகள்!!

தேனி மாவட்டம் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வேகமாகச் சரியும் வைகை அணையின் நீர்மட்டம்.. கவலையில் பாசன விவசாயிகள்!!

71 அடி உயரம் கொண்ட வைகை அணை கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக முழுக் கொள்ளளவில் நீடித்து வந்த நிலையில், கடந்த வாரம் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அணைக்கு நீர்வரத்து இல்லாத காரணத்தால் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.

குறிப்பாக  அணை நீர்மட்டம் 60 அடிக்கும் கீழாக குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழையும் இதுவரை போதுமான அளவு பெய்யாத நிலையில் இன்னும் 100 நாட்களுக்கும் மேலாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டியுள்ளது.இதனால் கவலை அடைந்துள்ள விவசாயிகள், பருவமழை கைவிடாமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்து வருகின்றனர்.