மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து உயர்வு...  மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் எனத் தகவல்...

மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து ஆயிரம் அடியில் இருந்து 2,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து உயர்வு...  மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் எனத் தகவல்...

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23.3 அடியை நேற்று எட்டி நிரம்பியது இன்று 24. அடியாக உள்ளது. நேற்று வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக வந்து இருந்த நிலையில் இன்று வினாடிக்கு 2000 உடனடியாக இரு மடங்காக உயர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது ஏரியில் 720 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வரும் உபரி நீர் அனைத்தும் ஏரியில் உள்ள 110 தானியங்கி ஷட்டர் மட்டும் கலங்கள் வழியாக வெளியேறுகிறது. வெளியேறும் உபரி நீர் கிளியாற்றில் வெளியேற்றபடுகிறது.

நேற்று இரவு முதல் பகுதியில் மழை இல்லை என்றாலும் நீர்வரத்து பகுதிகளான திருவண்ணாமலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக கிளியர் மற்றும் உத்திரமேரூர் மடுகு வழியாக நீர் வரத்து என்பது ஒரு மணிக்கு ஒரு முறை உயர்ந்து கொண்டே உள்ளது.  அதனால் மேலும் ஏரிக்கு வரும் நீர்வரத்து உயர வாய்ப்புள்ளதாக பொதுப் பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிகப்படியான நீர் வந்தால் அவை அனைத்தும் கிளியாற்றில் அவசரகால ஷட்டர் மூலம் அவற்றை   வெளியேற்ற  உள்ளனர்.  அப்படி அதிகமான உபரிநீர் வெளியேற்றும் போது இரு கரையோர மக்களுக்கு ஏற்கனவே இரண்டு தினங்களுக்கு முன்பாக மாவட்ட நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்படி அதிகமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டால் இரு கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.