முதல்போக பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து விநாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு!!

தேனி மாவட்டம், வைகை அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்காக விநாடிக்கு 900 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

முதல்போக பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து விநாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு!!

ஜுன் மாதம் முதல் வாரத்தில் வழக்கமாக மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள முதல்போக பாசன நிலங்களின் விவசாயப் பயன்பாட்டுக்காக தண்ணீர் திறக்கப்படும்.

பொதுவாக நீர்இருப்பு குறைவால் சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்படும். இந்த ஆண்டு போதுமான நீர்இருப்பு உள்ளதால் வைகை அணையின் 7 மதகுகள் வழியே விநாடிக்கு 900 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்த நிலையில், 45 நாட்களுக்கு தொடர்ச்சியாக நீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் திண்டுக்கல்லில் ஆயிரத்து 797 ஏக்கர் நிலங்களும், மதுரையில் 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும்.