கல்லணையில் இருந்து டெல்டா சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு.. கொக்கேரி பீமனோடை வடிகால் வாய்க்காலில் முதலமைச்சர் ஆய்வு

கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் தஞ்சை பாபநாசம் அடுத்த கொக்கேரி பீமனோடை வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில்  தூர்வாரும் பணிகளை  முதல்வர் ஆய்வு செய்தார்.

கல்லணையில் இருந்து டெல்டா சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு.. கொக்கேரி பீமனோடை வடிகால் வாய்க்காலில்  முதலமைச்சர் ஆய்வு

குறுவை சாகுபடிக்காக முன்கூட்டியே தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கையை ஏற்று டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தூர்வார 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

 தஞ்சை மாவட்டத்தில் 21 கோடி ரூபாயில் 170 பணிகள் 1456 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில். மேட்டூர் அணையில் இருநு்து டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த கொக்கேரி கிராமத்தில் உள்ள பீமனோடை 14.50 லட்சம் மதிப்புள்ள வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார்.

 நாளை நாகை திருவாரூர் மயிலாடுதுறை தஞ்சை திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் தூர்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.