மேட்டூர் அணையிலிருந்து நீர் வெளியேற்றம்.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

மேட்டூர் அணையிலிருந்து நீர் வெளியேற்றம்.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு:

காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக கடந்த 16 ஆம் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் உபரி நீரை அணையின் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. பின்னர் நீர் வரத்து குறைந்ததால் கடந்த 25 ஆம் தேதி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. பின்னர் டெல்டா பாசனத்திற்காக நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.

அணைக்கு நீர் வரத்து 42,000 கன அடி:

இன்று காலை 41 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போது 42 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 6 நாட்களுக்கு பிறகு இன்று இரண்டாவது நாளாக 16 கண் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் மின் நிலையம் வழியாக மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 23 ஆயிரம் கன அடி நீரும் 16 கண் மதகுகள் வழியாக 18 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை:

நீர் வெளியேற்றம் காரணமாக காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.